முழங்கால் வலியால் அவதி: பிரபாசுக்கு அறுவை சிகிச்சை

முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு, ஓரிரு மாதங்கள் ஓய்வுக்கு பிறகு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
முழங்கால் வலியால் அவதி: பிரபாசுக்கு அறுவை சிகிச்சை
Published on

நடிகர் பிரபாஸ் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

பிரபாஸ் சமீபகாலமாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். 'பாகுபலி' படத்துக்காக வருடக்கணக்கில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போதே, அவருக்கு இந்த பிரச்சினை இருந்ததாம். அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது இந்த பிரச்சினை ஏற்பட்டதாம்.

அதனைத்தொடர்ந்து அவர் நடித்த 'சாஹோ', 'ராதே ஷ்யாம்', 'ஆதி புருஷ்' படங்களில் பெரியளவில் அவருக்கு நடனமாடும் வாய்ப்புகள் இல்லை. இதனால் அவர் முழங்கால் வலிக்கு பெரியளவில் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தார். தற்போது நடித்து வரும் 'கல்கி' படம் 'பீரியட்' படம் என்பதால் அவருக்கு அதில் நடன வாய்ப்புகள் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை.

'கல்கி' படத்துக்கு பிறகு அவர் மாருதி இயக்கத்தில் 'ராஜா டீலக்ஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். படத்தில் நடனத்துக்கும் முக்கியத்துவம் உள்ளதால், பிரபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.

அதன்படி 'கல்கி' படப்பிடிப்பு முடிந்ததும் முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு, ஓரிரு மாதங்கள் ஓய்வுக்கு பிறகு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com