'மங்காத்தா' ரீ-ரிலீஸ்...அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்


மங்காத்தா ரீ-ரிலீஸ்...அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்
x

‘மங்காத்தா’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011ல் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நீண்ட நாட்கள் கழித்து நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் நடிகர் அஜித். திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு ‘மங்காத்தா’ படம் பெரும் 'கம்பேக்'காக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான். கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் ‘மங்காத்தா’.

அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார். ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

இதற்கிடையில், ‘மங்காத்தா’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் கிங்மேக்கர் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘மங்காத்தா’ படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளது. அதன்படி, ‘மங்காத்தா’ படத்தின் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டு தொடர்ந்து இணைந்திருங்கள் என்று தெரிவித்துள்ளது. ‘மங்காத்தா’ ரீ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story