சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் சூர்யா நடித்துள்ளார்.
சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இது சூர்யாவின் 46-வது படமாகும். நாக வம்சி தயாரித்துள்ள இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com