உயிர் பறிக்கும் கொரோனா எச்சரிக்கும் பேரரசு, விஷ்ணு விஷால்

கொரோனா தொற்றில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்கும்படி பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.
உயிர் பறிக்கும் கொரோனா எச்சரிக்கும் பேரரசு, விஷ்ணு விஷால்
Published on

கொரோனா 2-வது அலையில் நடிகர்கள் பாண்டு, மாறன், ஜோக்கர் துளசி, நிதிஷ் வீரா, டைரக்டர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, தயாளன், பாடகர் கோமகன், தயாரிப்பாளர் பாபுராஜ் உள்ளிட்டோர் மரணம் அடைந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைவரும் கொரோனா தொற்றில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்கும்படி பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், எழுத மனம் வலிக்கிறது. நிதிஷ் வீராவுடன் வெண்ணிலா கபடி குழு, மாவீரன் கிட்டு ஆகிய படங்களில் நடித்து இருக்கிறேன். இந்த கொரோனா 2-வது அலை பல உயிர்களை பறித்து வருகிறது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு நெருங்கியவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

டைரக்டர் பேரரசு வெளியிட்டுள்ள பதிவில், தினமும் தெரிந்த முகங்களின் மரணம். நேரில் பார்க்க முடியாத அவலம். கடந்து வந்த காலங்களில் இதுவே கொடூரமான காலம். தற்போது எமனின் கையில் இருப்பது பாசக்கயிறு அல்ல. பாசவலை. நம் அலட்சியமும் பொறுப்பின்மையும் நாம் தற்கொலை செய்வதற்கும் பிறரை கொல்வதற்கும் சமமாகிவிடும். வாழ்வோம். வாழவைப்போம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com