இந்திய குறும்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

இந்திய குறும்படமான ‘இரை’ சர்வதேச விருதைப் பெற்றுள்ளது.
இந்திய குறும்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
Published on

சென்னை,

20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான படங்கள் போட்டியிட்ட நிலையில், இந்திய குறும்படமான ‘இரை’ சர்வதேச விருதைப் பெற்றுள்ளது.

12வது தாக்கா சர்வதேச மொபைல் திரைப்பட விழா (12th Dhaka International Mobile Film Festival) நடைபெற்று வந்த நிலையில், அதன் வெர்டிகல் (Vertical) பிரிவில் சிறந்த திரைப்படமாக இயக்குநர் ஜெயசந்திரா ஹஸ்மி இயக்கிய ‘இரை’ என்ற குறும்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Also Read
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: தமிழ் குறும்படம் தேர்வு
இந்திய குறும்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுடன் போட்டியிட்டு, தமிழ் மொழியில் உருவான இந்தக் குறும்படம் விருதைப் பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கும் இந்தியக் குறும்பட உலகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

‘இரை’ குறும்படத்தின் இந்த சர்வதேச அங்கீகாரம், இயக்குநர் ஜெயசந்திரா ஹஸ்மி உள்ளிட்ட படக்குழுவினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com