56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: தமிழ் குறும்படம் தேர்வு


56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: தமிழ் குறும்படம் தேர்வு
x

இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை' குறும்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகி இருக்கிறது.

கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஞானி கிரியேஷன்ஸ் ஜெயந்தி தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை' குறும்படம் தேர்வாகி இருக்கிறது.

இதுகுறித்து கணேஷ்பாபு கூறும்போது, ‘‘உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பால் சுரந்து படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த ‘ஆநிரை'. இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி'' என்றார்.

அர்ச்சுனன் மாரியப்பன், அஞ்சனா தமிழ்ச்செல்வி, மீரா, கவுரிசங்கர், காமாட்சிசுந்தரம், கணேஷ்பாபு மற்றும் பலர் நடித்த இந்த குறும்படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். பி.செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். இதையொட்டி ‘ஆநிரை' படக்குழுவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல சிவகார்த்திகேயனின் ‘அமரன்', அப்புக்குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்' படங்களும் விழாவுக்கு தேர்வாகி இருக்கின்றன.

1 More update

Next Story