'தங்க நட்சத்திரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

உமாபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ளார்.
'தங்க நட்சத்திரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

விஜய் நடிப்பில் வெற்றிப்பெற்ற 'யூத்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக வலம் வருபவர் நடிகர் நட்டி என்னும் நட்டி நட்ராஜ். இவர் 'சதுரங்க வேட்டை ,கர்ணன், மகாராஜா, கம்பி கட்ன கதை' திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதற்கிடையில், இவர் தற்போது உமாபதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்க நட்சத்திரம்' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் எம்.எஸ் பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில், எப்போ.. எப்போ.. திரைப்படம் எப்போ?, சாதி மதம் இல்லயடி பாப்பா எங்க படத்துக்கு தேதிய தாப்பா?, அறிவியல் படத்துக்கு அரசியல் எதுற்கு? என்ற வித்தியாசமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பர்ஸ்ட் போஸ்டர் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com