'அதுதான் என்னுடைய கனவு '' -யுவன் சங்கர் ராஜா


That is my dream - Yuvan Shankar Raja
x
தினத்தந்தி 2 March 2025 10:28 AM IST (Updated: 2 March 2025 11:28 AM IST)
t-max-icont-min-icon

தற்போது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஸ்வீட்ஹார்ட்'

சென்னை,

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேமா காதல், ஹை ஆன் லவ், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

தற்போது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், "ஸ்வீட்ஹார்ட் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது. இது இயக்குனர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு '' என்றார்.

1 More update

Next Story