ஒரு நடிகைக்கு கிடைக்கும் உண்மையான அங்கீகாரம் அதுதான்- ஜெயிலர் பட நடிகை

நடிகை மிர்னா தற்போது அசோக் செல்வனுடன் ‘18 மைல்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி மருமகளாக நடித்தவர் மிர்னா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் மிர்னா தற்போது அசோக் செல்வனுடன் 18 மைல்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், “நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம். அந்த வகையில், ஆழமான, இளகிய அதே சமயம் உண்மையான உணர்வுகளை நடிப்பில் கொண்டு வர வேண்டிய கதாபாத்திரம் ’18 மைல்ஸ்’-ல் எனக்கு கிடைத்திருக்கிறது.
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் அசோக் தெளிவாக இருந்தார். அவருடைய டெடிகேஷன் எனக்கும் இன்ஸ்பையரிங்காக இருந்தது. வெறும் நடிப்பு மட்டுமே என்றில்லாமல் அன்பு மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டையும் கையாள வேண்டும் என்ற இடத்தில் இருக்கும் இரு நபர்களின் கதை. ’18 மைல்ஸ்’ கிளிம்ப்சுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. ‘18 மைல்ஸ்’ வெளியாகும்போது ரசிகர்கள் எந்தளவிற்கு கதையின் உணர்வுகளுடன் தங்களைப் பொருத்தி பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்”.






