டைரக்டர் மீது நடிகை பாலியல் புகார்


டைரக்டர் மீது நடிகை பாலியல் புகார்
x
தினத்தந்தி 3 July 2024 9:36 AM IST (Updated: 3 July 2024 10:06 AM IST)
t-max-icont-min-icon

சினிமாவில் அச்சுறுத்தல்கள் வந்தன என்று நடிகை திவ்யங்கா திரிபாதி கூறினார்.

இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான திவ்யங்கா திரிபாதி சினிமாவில் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து திவ்யங்கா திரிபாதி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

நான் நடிக்க வந்த புதிதில் நிதி நெருக்கடியை சந்தித்தேன். அப்போது ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் நடிக்க ஒரு நிபந்தனை விதித்தனர். அதாவது இயக்குனருடன் கொஞ்சம் நேரத்தை செலவிட வேண்டும் என்றனர். இது தொழிலில் சகஜமாக நடப்பதுதான் என்றும் கூறினர். இந்த நபர்கள் பொதுவாக புதியவர்களை குறிவைக்கின்றனர்.

கோரிக்கையை ஏற்க நான் மறுத்ததும் அச்சுறுத்தல்கள் வந்தன. நிறைய அழுத்தமும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் எனது முடிவில் நான் உறுதியாக இருந்தேன். வாய்ப்பையும் ஏற்க மறுத்தேன். எனது திறமையில் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story