`கான் சிட்டி' பட பர்ஸ்ட் சிங்கிளின் பிடிஎஸ் வீடியோ வெளியானது

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 `கான் சிட்டி' பட பர்ஸ்ட் சிங்கிளின் பிடிஎஸ் வீடியோ வெளியானது
Published on

சென்னை,

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் கான் சிட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.

மேலும் வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான கொரியன் பேமிலி பாடலின் பிடிஎஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது வெளியான சில மணிநேரத்திலேயே ரசிகர்களிடையே இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அடுத்த ஒருவாரத்திற்கு இப்பாடல்தான் இன்ஸ்டா டிரெண்ட் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com