"மார்ஷல்" படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு

கார்த்தியின் 29வது படத்தினை டாணாக்காரண் பட இயக்குனர் தமிழ் இயக்க உள்ளார்.
சென்னை,
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் படம் வெளியானது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நலன் குமாராசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்திலும், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் 'சார்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து, டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு "மார்ஷல்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இதில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்க உள்ளதாகவும், கதாநாயகியாகவும் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் 29-வது படத்தின் (மார்ஷல்) திரைப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






