பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடிக்கும் "தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்"

இப்படத்திற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடிக்கும் "தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்"
Published on

இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஹாலிவுட்டில் மார்வெல், டிசி நிறுவனங்களின் கீழ் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்கள் உருவாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில், கடந்த 25ம் தேதி மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' படம் வெளியானது.

இதனை மேட்ஷாக்மேன் இயக்கிய இந்த படத்தில், பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் குவின், எபோன் மோஸ்-பச்ராச் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், உலகளவில் "தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்" திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 1700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com