'கராத்தே பாபு' படத்தின் டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு

'கராத்தே பாபு' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
'கராத்தே பாபு' படத்தின் டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்துள்ளார்.

ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சக்தி வாசுதேவன், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், கராத்தே பாபு படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com