'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு

நயன்தாரா, கவின் நடித்துள்ள 'ஹாய்' படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரௌடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘கண்ணக்குழியா’ என்ற பாடலுக்கான முக்கிய அப்டேட் இன்று மாலை 05.04 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com