நடிகர் அதர்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட படக்குழு

'பராசக்தி' பட இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் அதர்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அதர்வாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட படக்குழு
Published on

சென்னை,

நடிகர் அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கி வரும் 'பராசக்தி' படத்திலும், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் 'டிஎன்ஏ' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் 'இதயம் முரளி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'இதயம் முரளி' படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் இயக்குனர் சுதா கொங்கராவும் வீடியோ வெளியிட்டு அதர்வாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com