அபர்ணதி நடிக்கும் 'வெஞ்சென்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


அபர்ணதி நடிக்கும் வெஞ்சென்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
x

அறிமுக ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி நடிக்கும் 'வெஞ்சென்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

சின்னத்திரையில் `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து `தேன்', `ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த இரண்டு படங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றார். இதையடுத்து அபர்ணதி `இறுகப்பற்று' படத்தில் கடைசியாக நடிந்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில் இவர் தற்போது அறிமுக இயக்குனர் ராகுல் அசோக் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'வெஞ்சென்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏசி புரொடக்சன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story