'ஆழி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார்.
'ஆழி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் ஆழி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார். இந்த படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரித்தள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், ஆழி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் சரத்குமார் தாடியுடன் கரடுமுரடான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com