'லெனின் பாண்டியன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

தர்ஷன் கணேசன் நடித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'லெனின் பாண்டியன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
Published on

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவருக்கு துஷ்யந்த், தர்ஷன் கணேசன் என 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே, சத்தியஜோதி பிலிம்ஸ் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் டி.டி.பாலசந்திரன் டைரக்‌ஷனில் உருவாகி வரும் திரைப்படம் லெனின் பாண்டியன். இப்படத்தின் கதாநாயகனாக சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் கங்கை அமரன், நடிகை ரோஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், லெனின் பாண்டியன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ’உன்னை நம்பி’ எனத்தொடங்கும் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை ஸ்வேத்தா மோகன் பாடியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com