லண்டனில் பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்ட 'இசைஞானி' இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது.
லண்டன்,
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது, 'இசைஞானி' இளையராஜா மேற்கத்திய - கர்நாடக இசை கலந்த 'வேலியண்ட்' பாரம்பரிய சிம்பொனி இசையை இயற்றி இருக்கிறார். இதனை அரங்கேற்றும் நிகழ்ச்சி, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இன்று இரவு நேரடி நிகழ்ச்சியாக நடைபெற்றது.
உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது.
Related Tags :
Next Story






