முதல் தெலுங்கு ஹீரோ...நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கிடைத்த கவுரவம்

இந்த புத்தகத்தில் இடம்பெறும் முதல் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாதான்.
சென்னை,
இங்கிலாந்தில் உள்ள ''வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'' புத்தகத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவின் பெயர் இடம்பிடித்திருக்கிறது.
தெலுங்கு சினிமாவை தாண்டி இந்திய அளவில் அதிகம் ரசிக்கப்படும் ஆக்சன் ஹீரோவாக கொண்டாடப்படுபவர்தான் நடிகர் பாலகிருஷ்ணா.
1974-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி 50 வருடங்களை கடந்து சாதனை படைத்திருக்கும் இவரை கவுரவப்படுத்தும் விதமாக, இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் அவரின் பெயரை சேர்த்திருக்கார்கள்.
இந்த புத்தகத்தில் இடம்பெறும் முதல் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாதான். சினிமாவில் ஐந்து தலைமுறைக்கு பங்களிப்பை கொடுத்து, பாலகிருஷ்ணா லட்சக்கணக்கானோருக்கு முன்மாதிரியாக விளங்குவதாவும் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு புகழ்ந்திருக்கிறது. பாலகிருஷ்ணா நடித்திருக்கும் ''அகண்டா 2'' படம் செப்டம்பர் 25-ம் தேதி ரிலீசாக உள்ளது.






