‘காந்தா’ நடிகையின் புதிய முயற்சி… ரசிகர்கள் அதை ஏற்பார்களா?

பாக்யஸ்ரீ-யின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறதாம்.
‘காந்தா’ நடிகையின் புதிய முயற்சி… ரசிகர்கள் அதை ஏற்பார்களா?
Published on

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் பாக்யஸ்ரீ போர்ஸ், தமிழில் 'காந்தா' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். மராட்டியத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இதர மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கிடையில் சமீப காலமாக லேசான கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். பட விழாக்களிலும் கொஞ்சம் அசரவைக்கும் படியாகவே உலா வருகிறார்.

பாக்யஸ்ரீ-யின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறதாம். அதாவது கவர்ச்சி காட்டி நடிக்க பாக்யஸ்ரீ முடிவு செய்துள்ளாராம். ஆனால் இதுவரை குடும்ப பாங்காகவே நடித்ததால் ரசிகர்கள் அதை ஏற்பார்களா? என்று அவர் யோசிக்கிறாராம். எனவே ரசிகர்களின் மனநிலையை அறிய லேசான கவர்ச்சி காட்டி படங்களை வெளியிடுகிறார்.

தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ்-ன் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவதால், அவர் அதீத நம்பிக்கையில் இருக்கிறாராம். விரைவில் திரையில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com