"ஜனநாயகன்” படம் கசிந்திருப்பது தவறு இல்லை… நேரடியான திருட்டு - நடிகர் சூரி

"ஜனநாயகன்” படம் குறித்து நடிகர் சூரி காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"ஜனநாயகன்” படம் கசிந்திருப்பது தவறு இல்லை… நேரடியான திருட்டு - நடிகர் சூரி
Published on

சென்னை,

விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது 'ஜன நாயகன்' படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத்தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

இது குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இது ஒரு படத்தை மட்டும் பாதிக்காது…

நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் தாக்கும் செயல்.

இது சினிமா பிரச்சனை மட்டும் இல்லை…

உழைப்பை மதிக்காத மனநிலை.

இதற்கு ஒரே பதில் கடுமையான நடவடிக்கை.

நாங்கள் உருவாக்குவது படம் இல்லை… நம்பிக்கை.

அதை காக்குவது பொறுப்பு இல்லை… கடமை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com