“அரசன்” படம் தரமான சம்பவம் செய்யும் - அப்டேட் கொடுத்த சிலம்பரசன்

“அரசன்” திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

“அரசன்” படம் தரமான சம்பவம் செய்யும் - அப்டேட் கொடுத்த சிலம்பரசன்
Published on

சென்னை,

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிலம்பரசன், “அரசன் திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பொங்கலுக்கு படம் ரிலீஸாகவில்லை. நீங்கள் அனைவருமே பெருமைப்படும் வகையில் அரசன் படம் தரமான சம்பவத்தை செய்யும்” என்றார்.

கேங்ஸ்டர் கதையில் 'அரசன்'

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (எஸ்டிஆர்) நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையில் வெளியாகுமா?

2 மாதங்களுக்கு முன் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பகலாக படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற சமீபத்திய கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிலம்பரசன், 'அரசன்' திரைப்படம் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, “அரசன் திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பொங்கலுக்கு படம் ரிலீஸாகவில்லை. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் அனைவருமே பெருமைப்படும் வகையில் அரசன் படம் தரமான சம்பவத்தை செய்யும். ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த 'The World of Arasan' படத்துடைய க்ளிம்ப்ஸ் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் பிரத்யேகமாக வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com