ஓ.டி.டி.யில் வெளியான 'எமகாதகி' திரைப்படம்

நடிகை ரூபா கொடுவாயூர் நடித்துள்ள 'எமகாதகி' திரைப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'உமா மஹேஷ்வர உக்ரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் ரூபா கொடுவாயுர். அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் நடித்த முதல் படம் 'எமகாதகி'. இந்த படத்தினை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் இந்தப் படம் பேசுகிறது. இப்படத்திற்கு நடிகை ரூபா கொடுவாயூர் 20 நாட்களுக்கும் மேல் பிணமாக நடித்துள்ளார். அதனால் அவருக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஜாதி, காதல், ஆவணப்படுகொலை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் இன்று (ஏப்ரல் 14-ந் தேதி) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






