வைரலாகும் செல்வராகவன் படத்தின் புதிய போஸ்டர்

இப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
The new poster of Selvaraghavan's film is going viral
Published on

சென்னை,

நடிகர் செல்வராகவன் தற்போது நடித்து வரும் படம் மனிதன் தெய்வமாகலாம். இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, டிரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி ஆகியோர் நடிக்கின்றனர்.

இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது.

இந்நிலையில், மனிதன் தெய்வமாகலாம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com