'கிங் ஆஃப் கோதா' படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ வெளியானது

துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
'கிங் ஆஃப் கோதா' படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ வெளியானது
Published on

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த படத்தின் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடல் நாளை (ஜூன் 28) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் 'கலாட்டாக்காரன்' பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com