“ஒருநாள் நிச்சயம் நனவாகும்” - தனது நீண்டநாள் ஆசை பற்றி பகிர்ந்த நடிகை ரித்தி

2018-ம் ஆண்டு வெளியான ’லவ்வர்’ திரைப்படத்தின் மூலம் ரித்தி குமார் அறிமுகமானார்.
“ஒருநாள் நிச்சயம் நனவாகும்” -  தனது நீண்டநாள் ஆசை பற்றி பகிர்ந்த நடிகை ரித்தி
Published on

சென்னை,

இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரித்தி குமார். சமீபத்தில் இவர் பிரபாஸுடன் ’தி ராஜா சாப்’ படத்தில் நடித்திருந்தார்.

அத்திரைப்படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், தனது கனவு வேடம் குறித்து மனம் திறந்துள்ளார். புகழ்பெற்ற நடிகை ரேக்காவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “புகழ்பெற்ற நடிகை ரேக்காவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவராகவே நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அவரின் ஆன்மாவுடனும் மனதுடனும் எனக்கு ஒரு ஆழமான தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். பலரும் எங்களுக்குள் ஒற்றுமைகள் இருப்பதாக கூறியுள்ளனர். தோற்றத்தை விட அவர்களின் உழைப்பு, மன உறுதி ஆகியவற்றோடு எனக்கு ஒரு இணைப்பு இருக்கிறது. ஒருநாள் இந்த கனவு நனவாகும் என நம்புகிறேன்,” என்றார்.

Also Read
“என்னை பற்றி நெகட்டிவ்வா பேசினா...- சமந்தா அதிரடி பதில்
“ஒருநாள் நிச்சயம் நனவாகும்” -  தனது நீண்டநாள் ஆசை பற்றி பகிர்ந்த நடிகை ரித்தி

2018-ம் ஆண்டு வெளியான ’லவ்வர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரித்தி குமார், பின்னர் ’ராதே ஷ்யாம்’, ’சலாம் வெங்கி’, ’சூப்பர்பாய்ஸ் ஆப் மாலேகான்’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும், மேலும் பல வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com