ஆண்ட்ரியா நடித்துள்ள 'கா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார்.
ஆண்ட்ரியா நடித்துள்ள 'கா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் 'கா'. இந்த படத்தில் ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்சன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி. பாபு இசையமைத்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு 'கா' படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், 'கா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'கா' திரைப்படம் வருகிற மார்ச் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com