ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த 'கேப்டன் மில்லர்' படக்குழு..!

'கேப்டன் மில்லர்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த 'கேப்டன் மில்லர்' படக்குழு..!
Published on

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் உறுதி செய்துள்ளது. ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில், "தனுஷின் இரண்டு பழைய படங்கள் திரையரங்குகளில் ஓடுகின்றன. இது அடுத்த மாதம் வெளியாகும் அவரது பிரமாண்ட படமான கேப்டன் மில்லரின் முன்னோட்டமா?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தயாரிப்பு நிறுவனம் 'கேப்டன் மில்லர்' பொங்கலுக்கு வெளியாகும் என்று பதிலளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com