கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Published on

சென்னை,

இயக்குனர் பிரபு சாலமன் 'காடன்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் 'செம்பி'. கோவை சரளா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், 'செம்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com