தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Published on

சென்னை,

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com