அருண் விஜய்யின் 'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருண் விஜய் நடித்துள்ள 'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

சென்னை,

1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.

தற்போது, கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் நடிகர் அருண் விஜய் 'ரெட்ட தல' படக்குழுவினருக்கு அசைவ விருந்தளித்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 'எங்கள் அற்புதமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி' என்றும் அதில் பதிவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com