‘சிறை’ நடிகரின் புதிய படம்


The Sirai actors new film... filming began with a puja ceremony
x
தினத்தந்தி 23 Jan 2026 6:18 AM IST (Updated: 23 Jan 2026 6:38 AM IST)
t-max-icont-min-icon

சிறை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அக்‌சய் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

’சிறை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இப்படத்தை இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

இத்திரைப்படத்தில் எல்.கே.அக்சய் குமார், ஜாபர் சாதிக், நோபல் கே.ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் , ஷாரீக் ஹாஸன் மற்றும் 'டியூட்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வருகிற 26-ம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘சிறை’ படம் உலகளவில் ரூ. 31.58 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story