பார்வையாளர்களை கண்ணீர் விட வைத்த ’சிறை’....வைரலாகும் வீடியோ


The sirai movie that brought viewers to tears... the video is going viral
x
தினத்தந்தி 26 Dec 2025 3:53 PM IST (Updated: 26 Dec 2025 4:45 PM IST)
t-max-icont-min-icon

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, பார்வையாளர்கள் கண்ணீருடன் தியேட்டரை விட்டு வெளிவருகின்றனர்.

சென்னை,

நேற்று (டிசம்பர் 25) திரையரங்குகளில் பல புதிய படங்கள் வெளியாகின. அதில் ஒரு படம் சிறை. இப்படம் பார்வையாளர்களை கண்ணீர் விட வைத்திருக்கிறது. கிறிஸ்துமஸ் பரிசாக, வெளியான இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும்நிலையில், படத்தைப் பார்க்க பார்வையாளர்கள் தியேட்டருக்கு அதிகமாக வருகின்றனர்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, பார்வையாளர்கள் கண்ணீருடன் வெளிவருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

விக்ரம் பிரபு, இந்தப் படத்தில் ஒரு கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார். அனிஷ்மா மற்றும் அக்‌ஷய் குமாரின் நடிப்பு பார்வையாளர்களை கவர்ந்தது. ஜஸ்டின் பிரபாகரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ’சிறை’படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

1 More update

Next Story