நாளை வெளியாகிறது ராமாயணா படத்தின் டீசர்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ராமாயணம்.
நாளை வெளியாகிறது ராமாயணா படத்தின் டீசர்
Published on

மும்பை,

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ராமாயணம். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் ரன்பீர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.

நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, தயாரிப்பு நிறுவனம் டீசர் வீடியோவை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com