நாளை வெளியாகும் ‘தங்க நட்சத்திரம்’ படத்தின் டீசர்

இந்தப் படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நாளை வெளியாகும் ‘தங்க நட்சத்திரம்’ படத்தின் டீசர்
Published on

சென்னை,

உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகி உள்ள “TN 2026 தங்க நட்சத்திரம்” திரைப்படத்தின் டீஸர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் நடராஜ் (நட்டி), எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, மற்றும் இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா, நடிகராக அறிமுகமாகி தற்போது இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்குகிறார்.

அரசியல் பின்னணியுடன் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தப் படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com