நடிகர் சதீஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு


நடிகர் சதீஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு
x

நடிகர் சதீஷ் தற்போது குரு சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். இவர் தனது டைம்மிங் காமெடி மூலம் பிரபலமானார். இவர் தற்போது, நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், இவர் தற்போது குரு சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் நடிகர் ஆதிசாய்குமார் மற்றும் நடிகை சரண்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தபடத்தினை எஸ்ஜிஎஸ் நிறுவனம் சார்பில் ஜி சுரேஷ்குமார் தயாரிக்கிறார். இந்த நிலையில், காமெடி கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு, "பத்து நாள் ராஜா" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story