சல்மான் கான் நடித்த 'மாத்ருபூமி' படத்தின் டிரெய்லர் வெளியானது

இப்படம், வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது.
 சல்மான் கான் நடித்த 'மாத்ருபூமி' படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on: 

மும்பை,

இந்திய-சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சல்மான் கானின் 'மாத்ருபூமி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கல்வான் மோதலை மையமாகக் கொண்ட கதை

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி இந்தியா-சீனா எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதில், 16-வது பீகார் ரெஜிமெண்டின் அதிகாரியான கர்னல் சந்தோஷ் பாபுவின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். அவருடன் நடிகை சித்ராங்கதா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாற்றப்பட்ட படத்தின் தலைப்பு

முதலில் 'பேட்டில் ஆப் கல்வான்' என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் பெயர் தற்போது 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' என மாற்றப்பட்டுள்ளது. போரின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், போர் வீரர்களின் தியாகத்தையும் போரின் மனிதநேயப் பக்கங்களையும் பேசும் வகையில் உருவாகியுள்ளது.

வெளியானது டிரெய்லர்

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சல்மான் கான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராணுவ வீரர்களின் துணிச்சல், எல்லைப் பகுதியில் நடைபெறும் மோதல்கள் மற்றும் அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ள டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X