நாளை வெளியாகிறது 'ப்ளூ ஸ்டார்' படத்தின் ட்ரெய்லர்...!

கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நாளை வெளியாகிறது 'ப்ளூ ஸ்டார்' படத்தின் ட்ரெய்லர்...!
Published on

சென்னை, 

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். சமீபத்தில் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

மேலும் வரும் 25-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மாலை 6 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com