எல்லாம் மாறப் போகுது... கவனம் ஈர்க்கும் 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரைலர்

'ஓ பட்டர்பிளை' திரைப்படம் வருகிற மார்ச் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எல்லாம் மாறப் போகுது... கவனம் ஈர்க்கும் 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரைலர்
Published on

விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'ஓ பட்டர்பிளை'. ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Also Read
என் அழகுக்கு அதுதான் காரணம் - நடிகை அஞ்சு குரியன்
எல்லாம் மாறப் போகுது... கவனம் ஈர்க்கும் 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரைலர்

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஹனிமூன் செல்லும் தம்பதி, அங்கு வரும் மனைவியின் முன்னாள் காதலன் என மூவருக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக 'ஓ பட்டர்பிளை' உருவாகியுள்ளது.

Also Read
நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபீஸ்ல இருப்பேன்... விஜய் போலவே பேசி வீடியோ வெளியிட்ட ஜூலி
எல்லாம் மாறப் போகுது... கவனம் ஈர்க்கும் 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரைலர்

இந்த டிரைலர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஓ பட்டர்பிளை' திரைப்படம் வருகிற மார்ச் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read
தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்வு: அன்புமணி கண்டனம்
எல்லாம் மாறப் போகுது... கவனம் ஈர்க்கும் 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரைலர்
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com