ஒரே படமாக வெளியாகும் பாகுபலியின் 2 பாகங்கள்

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஒரே படமாக வெளியாகும் பாகுபலியின் 2 பாகங்கள்
Published on

சென்னை,

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'பாகுபலி'. இதில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி 2 வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 'பாகுபாலி' படத்தை ரி-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீரிலீஸ் செய்யாமல் இரண்டையும் இணைத்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com