‘பிரபலமடைய என்னை தவறாக சித்தரிக்கிறார்கள்’ - யாஷிகா ஆனந்த் குற்றச்சாட்டு

நடிகை யாஷிகா ஆனந்த் குறித்து ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த்
Published on

சென்னை,

தமிழில் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து ‘பாடம்’, ‘துருவங்கள் பதினாறு’, ‘மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சர்ச்சைக்கு யாஷிகா விளக்கம்

இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் குறித்து ஒரு தகவல் "They are portraying me negatively to gain popularity" – Yashika Aannand alleges

சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதாவது, சமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சி ஆடையில் உலா வரும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். இதற்கு 'பொது இடத்தில் இப்படி அரைகுறை ஆடையில் போட்டோஷூட் எடுத்தால் முதல்-அமைச்சர் விஜய் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்' என ஒரு நபர் குற்றம்சாட்டியது போலவும், அதற்கு யாஷிகா திரிஷா பெயரை குறிப்பிட்டு பதில் அளித்தது போலவும் ஒரு 'ஸ்கி ரீன்ஷாட்' பதிவு இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த சர்ச்சைக்கு யாஷிகா தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

அந்த பதிவில், “தற்போது பரப்பப்பட்டு வரும் ஒரு விஷயம் முற்றிலும் உண்மையில்லாதது. இப்படியெல்லாம் என்னை கேவலமாக சித்தரித்து சிலர் பிரபலமடைய பார்க்கிறார்கள். நான் ஒரு தவறான பொருளை பயன்படுத்துவதாக இதற்கு முன்பு ஏ.ஐ. புகைப்படம் ஒன்றை பரப்பி அவதூறு பரப்பினார்கள். 'லைக்'குகள் வாங்க நடத்தும் இதுபோன்ற மோசமான செயலை யாரும் நம்பாதீர்கள்" என யாஷிகா பதிவிட்டு இருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com