

மும்பை,
சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் திஷா பதானி அணிந்த உடை சர்ச்சையானது. 'ஆன்மிக பண்டிகையிலும் இப்படி கவர்ச்சி அலங்காரம் தேவையா? என்றெல்லாம் கண்டனங்கள் வலுத்தன. இதையடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு திஷா பதானி வேதனை தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் திஷா பதானி, சூர்யா ஜோடியாக 'கங்குவா' படத்தில் நடித்தார். தற்போது இந்தியில் புதிய படங்கள் நடித்து வரும் இவர், ஹாலிவுட்டிலும் படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.
எந்த விழாக்களுக்கு சென்றாலும் கவர்ச்சி உடைகளை அணிந்து கலக்குவது திஷா பதானியின் வழக்கம். அவ்வப்போது கவர்ச்சிப் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் திஷா பதானி அணிந்த உடை சர்ச்சையானது. 'ஆன்மிக பண்டிகையிலும் இப்படி கவர்ச்சி அலங்காரம் தேவையா? என்றெல்லாம் கண்டனங்கள் வலுத்தன. இதையடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு திஷா பதானி வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, "ஒரு நடிகையாக நான் என் பயணத்தை சரியாக முன்னெடுத்துச் செல்கிறேன். பொதுவாக பிரபலங்கள் என்றாலே, அதுவும் நடிகை என்றால் விமர்சனங்கள் எழுவது வழக்கம். ஆனால் எனக்கு எதிராக ஒரு கூட்டமே இருப்பதாக நினைக்கிறேன். என்ன செய்தாலும் விமர்சிப்போரை என்னவென்று சொல்ல? பொதுவாக விமர்சனங்கள் என்னைக் கட்டுப்படுத்தாது. விமர்சனங்களை எளிதாக கடந்து விட்டால் தான் நல்லது. ஆனால் நகர முடியாத அளவுக்கு தனிமனித தாக்குதலாகவே விமர்சனங்கள் இருந்தால் அதை எப்படி எதிர்கொள்வது?
என்ன உடை அணிந்தாலும் அதற்கு ஒரு காரணம் கண்டுபிடித்து விமர்சிக்கிறார்கள். அலங்கார உடையிலும் இப்படி தாக்குதல் தொடுப்பவர்களை திருத்தவே முடியாது. எனக்கு விமர்சனங்கள் புதிதல்ல. நான் யாருடன் பேசினாலும், பழகினாலும் 'இப்படி, அப்படி' என்று இட்டுக்கட்டி பேசிவிடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் இப்படி குறைகள் பேசி திரிபவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.
ஆனால் இதனால் பாதிக்கப்படுவோரின் மனநிலையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். நல்ல விமர்சனங்களை, அறிவுரைகளை ஏற்க இங்கு எல்லாருமே தயார் தான். ஆனால் அறிவுரை என்ற பெயரில் விஷம எண்ணத்துடன் திரிபவர்களை பார்த்தால் தான் பயம் ஏற்படுகிறது. வழக்கம் போலவே இதையும் கடந்து போகிறேன். வலிகளை மனதுக்குள்ளேயே புதைக்கிறேன். எது சரியோ, அது நடக்கட்டும்" என்று விரக்தியை அள்ளிக்கொட்டுகிறார்.