

சென்னை,
ஜெய், மீனாட்சி கோவிந்த், யோகிபாபு நடிப்பில் பாபு விஜய் இயக்கியுள்ள படம் `சட்டென்று மாறுது வானிலை'. இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய ஏ.ஆர் முருகதாஸ் சர்கார் படம் பற்றி பேசினார். முருகதாஸ் கூறியதாவது: என்னுடைய மோசமான காலத்தில் உடன் இருந்தவர் பாபு விஜய். ’சர்கார்’ ரிலீஸ் ஆகி அந்த போஸ்டரை எல்லாம் கிழித்தார்கள். நானும், அவரும் காரில் உட்கார்ந்து கண்ணில் நீர் வழிய பார்த்தோம். இப்படி நெருக்கடியான காலத்தில் என்னோடு இருந்தவர்.
இந்த நிகழ்ச்சியில் என்ன பேசுவது என பாபு விஜயை கேட்டபோது, அவர்தான் பழ கருப்பையா சம்பவத்தை நினைவுபடுத்தினார்.இதுதான் அவருடைய திறமை. என்னிடம் இருந்து 12 உதவி இயக்குனர்கள், இயக்குனர் ஆகி இருக்கிறார்கள். இன்று பாபு விஜயின் நாள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். பாபு விஜய் ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.