இது போரை விரும்பாதவர்களுக்கான படம் - 'நீளிரா' திரைப்படத்தை பாராட்டிய சூர்யா

சோமிதரண் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள ‘நீளிரா’ படம் இன்று வெளியாகி உள்ளது.
இது போரை விரும்பாதவர்களுக்கான படம் - 'நீளிரா' திரைப்படத்தை பாராட்டிய சூர்யா
Published on

சென்னை,

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும், ராணா டகுபதியின்‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா, விது ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

இலங்கையில் போர் பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே ஒரு திருமணம் நடைபெறுகிறது. அதில் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதே படத்தின் உணர்ச்சிப்பூர்வமான பின்னணி. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘நீளிரா’ படத்தினை பாராட்டி நடிகர் சூர்யா நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீளிரா என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம். சம காலத்தில் நடைபெறும் போர்களால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது சாதாரண, எளிய மக்கள் தான். ஒரு போர் சூழலில் ஒரு கல்யாணம் நடக்கிறது, அந்த இரவை எப்படி கடக்கிறார்கள், எத்தனைப் பேர் பிழைக்கிறார்கள் என்பதை எமோஷனல் திரில்லர் ஆக இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது.

அந்த இரவை உணர்ந்தவர், அந்த இரவை கடந்தவரே இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.. இலங்கை தமிழர் நண்பர் சோமிதரன். கடந்த கால போர், இப்ப இருக்கிற சூழல் இதற்கெல்லாம் ஒரு மவுன சாட்சியா இந்தப் படம் நம் எல்லோர் மனசிலும் நிலைச்சு இருக்கும்னு நான் நம்புறேன். இது போரை விரும்பாதவர்களுக்கான படம்" என்று பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com