

தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாகிறது.
‘எல்.ஐ.கே’ படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘முதல்வரானால் என்ன செய்வேன்’ என்பது குறித்து பேசியுள்ளார்.
கிருத்தி ஷெட்டி கூறுகையில், “நம் நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு போதுமான தண்டனைகள் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொண்டு வர ஆசைப்படுகிறேன். நான் முதல்வரானால் அப்படியான விஷயங்களுக்கு தான் என்னுடைய முதல் கையெழுத்து” என்று தெரிவித்துள்ளார்.