என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்: ஷில்பா மஞ்சுநாத் பரபரப்பு பேச்சு

ஷில்பா மஞ்சுநாத் சமீபத்தில் பேசியுள்ள விஷயம் வைரலாகி இருக்கிறது.

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்: ஷில்பா மஞ்சுநாத் பரபரப்பு பேச்சு
Published on

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’, ‘வா வாத்தியார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர், தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இளைய தலைமுறையின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.

Also Read
மகள் மரணத்திற்கு பழி வாங்கும் தந்தை… சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் - எதில் பார்க்கலாம்?

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்: ஷில்பா மஞ்சுநாத் பரபரப்பு பேச்சு

இந்த நிலையில், ஷில்பா மஞ்சுநாத் சமீபத்தில் பேசியுள்ள விஷயம் வைரலாகி இருக்கிறது. அதில், எனது ஆண் ரசிகர்களுக்கு அவர்களின் காதலிகளால் பிரச்சினை வருவதாக கேள்விப்பட்டேன். படத்தில் திமிர் கலந்த என் அழகை பார்த்து, 'இவர் என் முன்னாள் காதலி போல இருக்கிறார்' என ரசிகர்கள் அவர்களின் மனைவிகளிடமும், காதலிகளிடமும், பெண் தோழிகளிடமும் சொல்லி புகழ்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகி விடுகிறது.

சமீபத்தில் கூட என்னை சந்தித்த ஒரு ரசிகர், அவரது மனைவி என்னை அதிகம் வெறுப்பதாக கூறி அதிர்ச்சி அளித்தார். ஒவ்வொரு முறையும் அவர் என்னை இன்ஸ்டாகிராமில் 'பாலோ' செய்ய, அடுத்த நிமிடமே அதை அவரது மனைவி 'அன்போலோ' செய்துவிடுகிறாராம். இதெல்லாம் ஆச்சரியம் தந்தாலும், ரசிகர்களின் மனங்களில் இப்படி தாக்கத்தை ஏற்படுத்தியதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார்.

Also Read
மீண்டும் தள்ளிப்போகும் 'எல்.ஐ.கே' பட ரிலீஸ்.. ரசிகர்களுக்கு தொடரும் ஏமாற்றம்

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்: ஷில்பா மஞ்சுநாத் பரபரப்பு பேச்சு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com