இந்த வார பாக்ஸ் ஆபிஸ் போட்டி... இன்று களமிறங்கும் புதிய படங்கள்

ரசிகர்களை மகிழ்விக்க களமிறங்கியுள்ள இந்தப் படங்களில் எந்தெந்த திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இந்த வார பாக்ஸ் ஆபிஸ் போட்டி... இன்று களமிறங்கும் புதிய படங்கள்
Published on

சென்னை,

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி, சினிமா ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைகின்றன. அந்த வகையில், இந்த வாரம் ஆகஸ்ட் 7-ந் தேதியான இன்று பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல தமிழ் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. ரசிகர்களை மகிழ்விக்க களமிறங்கியுள்ள இந்தப் படங்களில் எந்தெந்த திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

"ஜி.டி.என்."

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜி.டி.என்'. 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கதை 'ஜி.டி.என்' என்ற பெயரில் திரைப்படமாகி உருவாகி உள்ளது. இதில்

சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன் உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

"டிசி"

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிசி'. இதில் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி 'சந்திரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அனிருத் இசையமைத்துள்ளார்.

"போட்டோகிராபர்"

'ரா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஷ்ரப் தற்போது 'போட்டோகிராபர்' என்ற படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, அவரே படத்தை இயக்கவும் செய்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். "சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர்" பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் கருணாகரன், ஆடுகளம் நரேன், "உறியடி" சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர்.

"வைப் பேங்க் ஆப் இந்தியா"

'வைப் பேங்க் ஆப் இந்தியா' என்பது குடும்பம் மற்றும் நகைச்சுவை அம்சங்களை மையமாகக் கொண்ட திரைப்படம். இந்த படத்தை செல்வா எழுதி இயக்கியுள்ளார். கீ.சீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com