நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்... பட அதிபர் மீது போலீசில் நடிகை பாலியல் புகார்

நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்... பட அதிபர் மீது போலீசில் நடிகை பாலியல் புகார்
Published on

பிரபல இந்தி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. இவருக்கு தற்போது 42 வயது ஆகிறது. 2001-ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான 'ஹேமந்தர் பகி' என்ற படம் மூலம் ஸ்வஸ்திகா முகர்ஜி நடிகையாக அறிமுகமானார். 'காலா' என்ற படம் மூலம் இந்தி திரையுலகுக்கு வந்தார். இந்தியில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது 'ஷிபுர்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஸ்வஸ்திகா முகர்ஜி கொல்கத்தாவில் உள்ள கோல்ப் கிரீன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில், "இந்தி நடிகைகள் அனைவரும் எந்த பிரச்சினையும் செய்யாமல் என் ஆசைக்கு உடன்படுகிறார்கள். இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு கொடுத்து நிறைய சம்பளம் வாங்கி கொடுத்தது நான்தான். எனவே என்னுடன் ஒரு நாள் மட்டும் படுக்கையை பகிர்ந்து கொள் என்று சந்தீப் சர்கார் தொல்லை கொடுக்கிறார்.

ஆசைக்கு உடன்படவில்லை என்றால் மார்பிங் செய்த உனது நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்'' என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சந்தீப் சர்கார் தலைமறைவாகி விட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com